திருச்சி கோட்டை, உறையூர் பகுதியில்
கஞ்சா விற்ற 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது.
கோட்டை போலீசார் அதிரடி நடவடிக்கை.
திருச்சி கோட்டை போலீஸ் சரகம் நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் குமாரவேல் தலைமையிலான போலீசார் ரோந்து சென்று தீவிரமாக கண்காணித்தனர் .அங்கு கஞ்சா விற்றதாக கதீஜா, சம்சு நிஷா ஆகிய இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர். இதேபோல் உறையூர் பாண்டமங்கலம் பகுதியில் கஞ்சா விற்றதாக புத்தூரை சேர்ந்த பாட்ஷா என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.இவர்களிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட மூன்று பேரும் வழக்கு பதியப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.