Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழ்நாடு கோல் ஷாட் பால் அசோசியேஷன் சார்பாக நிர்வாகிகள் பதவியேற்பு மற்றும் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

0

'- Advertisement -

தமிழ்நாடு கோல் ஷாட் பால் அசோசியேஷன் சார்பாக நிர்வாகிகள் பதவியேற்பு மற்றும் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது:-

 

திருச்சி பஞ்சப்பூர் அருகே உள்ள இந்திரா கணேசன் கல்லூரியின் கூட்ட அரங்கில் தமிழ்நாடு கோல் ஷாட் பால் அசோசியேஷன் சார்பாக புதிய தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நேற்று சனிக்கிழமை அன்று நடைபெற்றது.

 

இந்த விழாவிற்கு தமிழ்நாடு கோல் ஷாட் பால் அசோசியேஷன் தலைவர், டாக்டர்.ஜி. ராஜசேகரன். செயலாளர், இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்கள் குழுமம், தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் எஸ்.பி. அண்ணாமலை , ப.தமிழ்வாணன். கே. ஜெயச்சந்திரன், ஏ.பவானி, எஸ்.ஜெயந்தி துணை – தலைவர்கள் , குத்து விளக்கு ஏற்றி வைத்து வரவேற்புரை ஆற்றினார்,

திருச்சி மாவட்ட கோல் ஷாட் பால் சங்கம், தலைவர் டாக்டர் ஜி. பாலகிருஷ்ணன் , துணைத் தலைவர் ,ஏ. ஸ்டான்லி வினோத் , இணைச் செயலாளர் டாக்டர்.ஆர். மாணிக்கம், டி.சிங்காரவேல் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

சிறப்பு விருந்தினராக இந்திய கோல் ஷாட் பால் அசோசியேஷன் நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளர், நோட்லா ராஜேந்திர பிரசாத், குத்து விளக்கு ஏற்றி வைத்து , விழா சிறப்புரையாற்றினார்.

மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக திருச்சி தேசிய கல்லூரியின் துணை முதல்வர்.பிரசன்ன பாலாஜி ,ஜென்னிஸ், கல்லூரியின் உடற்கல்வி முதல்வர் டாக்டர் அருள்மொழி சரவணன், திருச்சி மாவட்ட கோல் ஷாட் பால் அசோசியேஷன் பொருளாளருமான, C. முருகானந்தம் மற்றும் இந்த விழாவில் தமிழகத்திலிருந்து கோல் ஷாட் பால் அசோசியேஷன் சங்கத்தின் நிர்வாகிகள், விளையாட்டு நடுவர்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்,

 

நிகழ்ச்சியின் முடிவில் தமிழ்நாடு கோல் ஷாட் பால் அசோசியேஷன் பொதுச் செயலாளர், ஆர். கருணாகரன் நன்றி கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.