திருச்சி பெரிய கடைவீதியில் தங்க கட்டி வியாபாரியிடம் ரூ 33 லட்சம் ரொக்கப்பணம் பறிப்பு ரவுடிகள் உள்பட 6 பேர் மீது வழக்கு
திருச்சி பெரிய கடைவீதியில்
தங்க கட்டி வியாபாரியிடம் ரூ
33 லட்சம் ரொக்கப்பணம் பறிப்பு
ரவுடிகள் உள்பட 6 பேர் மீது வழக்கு
திருச்சி சாத்தனூர் இட்சிகா மலைப்பட்டி எம்ஜிஆர் நகர் முஸ்லிம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரபீக் (வயது 60) இவரது மகன் முகமது இப்ராஹிம் இவரும் திருச்சி ஆழ்வார்தோப்பு ஜாகிர் உசேன் தெரு பகுதியைச் சேர்ந்த முகமது உவைஸ் (வயது 32 ) தவ்பீக் ஆகிய மூன்று பேரும் தங்க கட்டி பிசினஸ் செய்து வந்தனர் .
பின்னர் முகமது இப்ராஹிமுக்கும் பங்குதாரர் முகமது உபைசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் முகமது இப்ராஹீமின் தந்தை முகமது ரபீக் திருச்சி பெரிய கடை வீதி கன்னிகா பரமேஸ்வரி கோவில் அருகே உள்ள ஒரு நகைக்கடைக்கு ஏழு தங்கக் கட்டிகளை விற்பனை செய்து விட்டு அதற்கான பணம் ரூபாய் 33 லட்சத்துடன் வெளியே வந்துள்ளார் .
அப்போது அங்கு மறைந்திருந்த முகமது உவைஸ் இன்னொரு ரவுடி முகமது அஷ்ரப் மற்றும் தவ்பிக்,
முசாமில் மற்றும் இரண்டு பேர் சேர்ந்து அந்த 33 லட்சம் பணத்தையும் பறித்துக் கொண்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது .
இதுகுறித்து முகமது ரஃபீக் கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் கோட்டை கிரைம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்னவல்லி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.