திருச்சி உறையூரில் கடனுக்காக ஆட்டோவை பறிமுதல் செய்ததால் டிரைவர் தற்கொலை . சிறுவன் உள்பட இரண்டு பேர் கைது .
திருச்சி உறையூர்
டாக்கர் ரோடு செல்வமுத்து மாரியம்மன் கோவில் முதல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன் வயது 23 இவர் ஒரு நிதி நிறுவனத்தில் வாடகை அடிப்படையில் ஒரு ஆட்டோவை ஓட்டி வந்தார் கடந்த ஐந்து மாதங்களாக ரூ.
15000 வாடகை பாக்கி வைத்துள்ளார்.
இந்த நிலையில் உறையூர் கல்லறை மேட்டு தெரு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 32) ஹரி சுதன் மற்றும் தேவநாதபுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து அன்பழகனை திட்டிவிட்டு அங்கு வீட்டில் நிறுத்தி இருந்த ஆட்டோவை பறை முதல் செய்து எடுத்துச் சென்றனர் இதனால் மனம் உடைந்த அன்பழகன் அருகாமையில் உள்ள புனிதா என்ற பெண்ணுக்கு தகவல் தெரிவித்துவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்தார் இதுகுறித்து உறையூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விக்னேஷ் மற்றும் சிறுவனை கைது செய்தனர்.
கைதான விக்னேஷ் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார் .
சிறுவன் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார் மேலும் இந்த வழக்கில் ஹரி ஹரசுதனை தேடி வருகின்றனர்.