திருச்சி கே கே நகரில்
கஞ்சா விற்றதாக 2 வாலிபர்கள் ஒரு கிலோ கஞ்சாவுடன் கைது – ஒருவர் தப்பி ஓட்டம்
ஒரு கிலோ ம்ற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்.
திருச்சி கே கே நகர் ஜேகே நகர் காஜாமலை மெயின் ரோடு பகுதியில் கே கே நகர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் கோசலராமன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்று கொண்டிருந்தனர் அப்போது சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்தவர்களை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர்
. விசாரணை செய்து கொண்டிருக்கும் போது தப்பிக்க முயன்ற இரண்டு பேர் பிடிபட்டனர்.விசாரணையில் அவர்கள் கே.கே.நகர் காந்தி நகரை சேர்ந்த காஜா ஷரீப், கே.சாத்தனூரை சேர்ந்த மகேஸ்வரன் ஆகிய இரண்டு வாலிபர்கள் என்பது தெரியவந்தது ஏர்போர்ட்டைச் சேர்ந்த குணா என்பவர் தப்பி ஓடிவிட்டார்.
கைதானவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது
இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.