திருச்சி ஹார்ட்வேர் கடை
லிப்டில் சிக்கி பெண் பணியாளர் பரிதாப பலி.
போலீசார் விசாரணை.
திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ் . இவரது மனைவி சுமதி (வயது52) இவர் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள தனியார் ஹார்டுவேர் கடையில் கடந்த ஆறு மாதங்களாக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை சுமதி கழிவறைக்கு செல்ல மூன்றாவது மாடிக்கு மின் தூக்கியில்.(லிப்ட்) சென்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவரது தலைமுடி மின்தூக்கியின் (லிட்டின்) கதவு பகுதியில் சிக்கி கொண்டது. இதில் அவரது தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.