Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஆசைக்கு இணங்கும் படி மாணவிகளிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி தமிழ் பேராசிரியர் .

0

'- Advertisement -

திருச்சி மாவட்டம், முசிறி பகுதியில் இயங்கி வரும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி தற்போது ஒரு பெரும் அதிர்ச்சிகரமான விவகாரத்தில் சிக்கியுள்ளது.

கல்லூரியின் தமிழ் துறையில் பேராசிரியராக பணியாற்றி வரும் நாகராஜன் என்பவர், கல்லூரி மாணவியிடம் முறைகேடான முறையில் நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

அந்த மாணவியிடம், தன்னுடைய பாலியல் விருப்பத்திற்கு உடன்பட வேண்டும் என்று வலியுறுத்தி, பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதற்கான ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவியதால், சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 

இதுகுறித்த ஆடியோவில், பேராசிரியர் மாணவியை துஷ்பிரயோகம் செய்யும் விதத்தில் பேசியிருப்பது கல்வியாளர்கள், பெற்றோர், மாணவிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மாணவிகள் பாதுகாப்பாகவும் மரியாதையுடனும் கல்வி கற்க வேண்டிய கல்லூரியிலேயே இப்படிப்பட்ட அசிங்கச் சம்பவம் நிகழ்ந்திருப்பது கண்டிக்கத்தக்கதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பெற்றோர்கள், ‘எங்கள் குழந்தைகள் கல்விக்காக கல்லூரிக்கு அனுப்பப்படுகிறார்கள். ஆனால் அங்கு பணிபுரியும் பேராசிரியரே இப்படிப்பட்ட அத்துமீறல்களில் ஈடுபடுவது எங்களை அச்சுறுத்துகிறது’ எனக் கூறி வருகிறார்கள்.

 

 

இந்த விவகாரம் குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டபோது, முதல்வர், ‘மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார். சம்பவம் கல்வித்துறையையே மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மாணவிகள் பாதுகாப்பு குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

கல்லூரியில் கற்பிக்கும் ஆசிரியர்களே இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டால், மாணவர்களின் மனநிலை பாதிக்கப்படும் என்றும், அவர்களுக்கான பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளை அரசு கடுமையாக மேற்கொள்ள வேண்டும் என்றும் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

 

இச்சம்பவம், கல்வி நிறுவனங்களில் மாணவிகளின் பாதுகாப்பு, ஒழுக்கம், மற்றும் பொறுப்புணர்வு பற்றிய கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.

 

திருச்சி மாவட்டம், முசிறி பகுதியில் இயங்கி வரும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி தற்போது ஒரு பெரும் அதிர்ச்சிகரமான விவகாரத்தில் சிக்கியுள்ளது. கல்லூரியின் தமிழ் துறையில் பேராசிரியராக பணியாற்றி வரும் நாகராஜன் என்பவர், கல்லூரி மாணவியிடம் முறைகேடான முறையில் நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.