திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகே
செல்போன் பறிக்க முயன்ற வாலிபர் கைது
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் கல்லக்குடியைச் சேர்ந்தவர் கிஷோர் குமார் (வயது 23). இவர் வேலை காரணமாக கடந்த 30 ந்தேதி திருச்சி வந்தார். ரெயில்வே ஜங்ஷன் அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு செல்போன் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமி இவரிடம் இருந்த செல்போனை பறிக்க முயன்றார் , சுதாரித்துக் கொண்ட கிஷோர் குமார் கூச்சலிட்டார்.
இதைத்தொடர்ந்து அந்த மர்ம ஆராமி ஆட்டோவில் ஏறி தப்பிச் சென்றார். இதுகுறித்து கண்டோன்மென்ட் போலீசார் வழக்குப்பதிந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையைச் சேர்ந்த ஸ்ரீஜி (வயது 34) என்ற வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.