Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பொன்மலை தென்பகுதி இரயில்வே பென்ஷனர்ஸ் சங்கத்தின் 41-ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் 2024-2025 பொது மகாசபைக் கூட்டம்

0

'- Advertisement -

 

பொன்மலை தென்பகுதி இரயில்வே பென்ஷனர்ஸ் சங்கத்தின் 41-ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் 2024-2025 பொது மகாசபைக் கூட்டம் பொன்மலை டாக்டர் அம்பேத்கர் மக்கள் மன்றம் தலைவர் கணேஷ் தலைமையிலும், நாகராஜ், முன்னிலையில் நடந்தது.

 

சங்க செயலாளர் P.ராமசாமி 2024 – 2025 ம் ஆண்டறிக்கை வாசித்து, வரவேற்றார்.

 

சங்க பொருளாளர் எம்.மகேந்திரன் 2024- 2025 வரவு, செலவு கணக்கு சமர்ப்பித்தார்.

சிறப்பு அழைப்பாளராக பொன்மலை ரயில்வே பணிமனை முதன்மை மேலாளர் ஆர்.சந்தோஷ்குமார் பட்ரோ, கணக்கு அலுவலர் மணிகண்டன், உதவி தொழிலாளர் அலுவலர் சுந்தரமூர்த்தி, ரயில்வே மருத்துவமனை மற்றும் GVN ஆஸ்பத்திரி டாக்டர்கள்,பேங்க் மேலாளர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்

 

உதவி செயலாளர் எஸ்.ரவிச்சந்திரன் தீர்மானங்கள் வாசித்தார். தீர்மானங்கள்

 

நேற்று 19-08-2025-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை பொன்மலை ஆர்மரிகேட் அருகில் உள்ள டாக்டர். அம்பேத்கார் இரயில்வே மக்கள் மன்றத்தில் நடைபெற்ற சதர்ன் இரயில்வே பென்ஷனர்ஸ்’ சங்கம்-பொன்மலையின் 41வது ஆண்டு நிறைவு விழாவும் மற்றும் பொது மகாசபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு

 

) கொரோனா வியாதி வந்தபொழுது, அதாவது 01-07-2020-ல் இருந்து 30-06-2021 வரை அதாவது 18 மாதகாலத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்ட கிராக்கி படி நிலுவைத் தொகையை உடனடியாக விடுவித்து அனைவருக்கும் வழங்க வேண்டுகிறோம்.

 

2)50% கிராக்கிப்படியை ஓய்வூதியத்துடன் இணைத்து அடிப்படை ஓய்வூதியமாக வழங்க வேண்டுகிறோம்.

 

3) தற்சமயம் வழங்கப்படும் FMA ரூபாய் 1000/- என்பதனை ரூபாய் 5000/- ஆக உயர்த்தி வழங்க வேண்டுகிறோம். FMA-ஐ அனைத்து ஓய்வு பெற்ற மற்றும் ஓய்வு பெறப்போகும் இரயில்வே ஊழியர்களுக்கும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் எவ்வித நிபந்தனையுமின்றி, பாரபட்சமில்லாமல் வழங்க வேண்டுகிறோம். வெளி நோயாளிப் பிரிவில் ஓய்வுபெற்ற அனைவருக்கும் / குடும்ப ஓய்வுதியர்களுக்கும் மருத்துவ வசதிகள் வழங்க வேண்டுகிறோம். அதாவது மருத்துவப் படியுடன் கூடிய வெளிநோயாளிப் பிரிவிலும் உள்நோயாளிப் பிரிவிலும் மருத்துவ வசதிகள் அளிக்க வேண்டும்

 

4 .65 வயது 70 வயது மற்றும் 75 வயது உள்ள அனைத்து ஓய்வூதியர்களுக்கும் குடும்ப ஓய்வூதியர்களுக்கும் முறையே 5% 10% மற்றும் 15% அதிகப்படி ஓய்வூதியம் பார்லிமென்டரி கமிட்டி சிபாரிசுபடி வழங்க வேண்டும்.

 

5) கம்யூடேஷன் தொகை பிடித்தத்தை 15 வருடத்தில் இருந்து 10 வருடம் 8 மாதமாக குறைத்து 10 வருடம் 8 மாத முடிவில் முழு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

 

6) குடும்ப ஓய்வூதியத்தை 30% லிருந்து 40% ஆக உயர்த்தி வழங்க வேண்டுகிறோம்.

 

7) ஓய்வூதியர்கள் அனைவருக்கும் வருமான வரி விலக்களித்து, அவர்கள் ஓய்வு பெற்ற நாளிலிருந்து வருமான வரிப் படிவம் சமர்ப்பிப்பதிலிருந்தும் விலக்களிக்க வேண்டும்

 

8) மூத்த குடிமக்களுக்கு ரயில் பயண கட்டணத்தில் முன்பு அளித்த சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்

 

9) வங்கிகளில் / அஞ்சல் அலுவலகத்தில் ஆயுள் சான்றிதழ் (Life Certificate) அளித்ததற்கான ஒப்புதல் சான்று (Acknowledgement) வழங்க வேண்டும். 10) 25-03-2025-ல் நிறைவேற்றப்பட்டுள்ள நிதி மற்றும் ஓய்வூதிய வழங்கல் மதிப்பீட்டுச் சட்டம் 1972ல் இருந்து அரசே தன்வசம் வைத்துக் கொள்ளும் நிலைப்பாட்டையும் திரும்பப்பெற்று அனைத்து ஓய்வூதியர்களுக்கும் எவ்வித இடையூறுமின்றி மாறுபாடு ஏதும் இன்றி, ஓய்வூதியத்தையும் மற்றும் கிராக்கிப்படியையும் வழங்க வேண்டும்

 

11) இரயில்வே தொழிலாளர்கள் ஓய்விற்குப் பின் இறந்தால், அவர்கள் இறப்பிற்கு கணிசமான நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.

 

12) NPS மற்றும் UPS பென்ஷன் திட்டங்களை முடிவிற்கு கொண்டுவந்து OPS பென்ஷன் திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்தி அனைவருக்கும் பழைய முறையில் ஓய்வூதியமும் மற்ற பயன்களையும் மாறுபாடின்றி வழங்க வேண்டுகிறோம்

13) எட்டாவது சம்பள கமிஷனை விரைவில் அமைத்து, அதன் சிபாரிசுகளை 01-01-2026 லிருந்து வேலையில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் மற்றும் ஓய்வூதியர்களுக்கும்/குடும்ப ஓய்வூதியர்களுக்கும் பணப்பலனை அளிக்க வேண்டுகிறோம்.

 

14) இந்திய உச்ச நீதிமன்றம்/மாநில உயர்நீதிமன்ற தீர்ப்புக்களை வழக்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமன்றி அது போன்றுள்ள மற்றவர்களுக்கும் ஒரு சேர அமல்படுத்தி தீர்ப்பின் பயனை அனைவருக்கும் வழங்க வேண்டும். அதாவது வழக்குரைத்தவர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் தீர்ப்பின் பயனை கிடைக்கச் செய்ய வேண்டும்.

 

15) ஓய்வூதியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் அவரவர்கள் விருப்பம் போல் PRC PASS வழங்க வேண்டுகிறோம் அதாவது முன்பு வழங்கியதை போல் CHEQUE PASS அல்லது மின்னியல் வடிவ பாஸ் (Electronic Pass) ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர் விருப்பப்படி வழங்க வேண்டும்.

 

16) விதவை, மணவிலக்களிக்கப்பட்ட மற்றும் திருமணமாகாத இரயில்வே ஊழியர்களின் மகள்களுக்கும், மனநலமற்ற, உடல் ஊனமுற்ற மகன்/மகன்களுக்கும் குடும்ப ஓய்வூதியத்தை காலதாமதமின்றி வழங்க உத்திரவிட்டும் அவர்களுக்குப் பாரபட்சம் இன்றி FMA வழங்க வேண்டுகிறோம்.

 

17) இரயில்வே மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர்கள் (Medical Officers) காலிப் பணியிடங்களையும், மற்றும் மருத்துவம் சார்ந்த தொழிலாளர்களின் காலிப் பணியிடங்களையும் உடனடியாக பூர்த்தி செய்து தரமான மருத்துவ வசதிகளை வழங்க வேண்டுகிறோம். மேலும் வெளி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஏற்பட்ட மருத்துவ செலவினை திரும்பத் தருவதற்கும் இரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்து ஆவண செய்யவும் வேண்டுகிறோம்.

 

18) தாராளமயமாக்கப்பட்ட உடல நலக்காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்பாடு செய்து அனைவருக்கும் அதன் பயனை பெறச்செய்ய வேண்டும்.

 

உதவி செயலாளர் வைகுண்டமூர்த்தி நன்றி கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.