திருச்சியில் முறைகேடாக விதியை மீறி பணி செய்ய வற்புறுத்தி மின்வாரிய பெண் அதிகாரிக்கு ஜிபேயில் லஞ்சம் அனுப்பியவர் மீது புகார்.
திருச்சியில் முறைகேடாக விதியை மீறி பணி செய்ய வற்புறுத்தி மின்வாரிய பெண் அதிகாரிக்கு ஜிபேயில் லஞ்சம் அனுப்பியவர் மீது புகார்.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசார் விசாரணை .
மின் பணி சோதனை ஒப்பந்ததாரர் பிரசாத் என்பவர் மீது, மின் வாரிய கிராப்பட்டி, எடமலைப்பட்டி புதூர் மின் வணிக பிரிவு ஆய்வாளர் (CI) இந்திரா இன்று பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார் .
அதில் லஞ்சம் வாங்க மறுத்த தன்னை மிரட்டுவதற்காகவும், தனது வங்கி கணக்கிற்கு ஜிபே மூலம் லஞ்ச பணமாக ரூ.40 ஆயிரம் அனுப்பி வைத்த ஒப்பந்ததாரர் பிரசாத் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் புகார் திருச்சி எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் .
இது குறித்து காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
மேலும் மின்வாரிய ஊழியர்கள் சிலரிடம் நாம் விசாரித்த போது சி ஐ இந்திரா ஒன்றும் லஞ்சம் வாங்காதவர் அல்ல, அதேபோன்று பிரசாத்தும் லஞ்சம் கொடுத்து பணிகளை மேற்கொள்பவர் தான் , மேலும் தான் கூறி பணிகளை மேற்கொள்ளாவிட்டால் விஜிலன்ஸ் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி மாட்டி விடுபவரும் கூட . இதனால் இவர்கள் இரண்டு பேருக்கும் இடையே நடந்த மோதல் என்னவென்று தெரியவில்லை என கூறுகின்றனர் . 40,000 லஞ்சம் கேட்டு பிரசாத் ஜி பேயில் அனுப்பியவுடன் தன்னை மாட்டி விட இவ்வாறு செய்கிறாய் என கருதி இந்திரா முந்திக்கொண்டு காவல்துறையில் புகார் அளித்து இருக்கலாம் என கூறப்படுகிறது