ஒருங்கிணைந்த வேளாளர், வெள்ளாளர் சமுதாய எழுச்சி மாநாடு திருச்சி ஜி கார்னரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
இந்த மாநாட்டில் கலந்து கொண்ட சமுதாய தலைவர்கள் முன்னிலையில் திருவிளக்கு ஏற்றி வைக்கப்பட்டது. இதைத்யடுத்து மைதீன் கோ. சாமிநாதன் வரவேற்புரை ஆற்றினார்.
மாநாட்டில் 103 வது குரு மகா சந்நிதானம் சிவப்பிரகாச தேசிய சத்தியஞான பரமாச்சார்ய சுவாமிகள
ஆசியுரை வழங்கினார். நிகழ்ச்சியில்
மாநாட்டு மலரை தொண்டை மண்டலம் கல்வி சார்பாக வேல்ஸ் பல்கலைக்கழகம் வேந்தர் மற்றும் நிறுவனர் டாக்டர் ஐசரி கணேஷ்,கொங்கு மண்டலம், வணிகம் சார்பாக பெஸ்ட் ராமசாமி சோழ மண்டலம், வேளாண்மை சார்பாக டாக்டர்
வி.ஜெ.செந்தில்,
பாண்டிய மண்டலம், இலக்கியம் சார்பில் ரகுராம், நாஞ்சில் மண்டலம் சார்பில்
வ.உ.சி.பேரன் வி, சிதம்பரம், ஆகியோர் மலரை வெளியிட கொங்கு, சோழ, தொண்டை, பாண்டிய, நாஞ்சில் மண்டல சங்கங்கள் சார்பில் நிர்வாகிகள் பெற்றுக் கொண்டார்கள், வேளாளர் வரலாற்று நூலை வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் மற்றும் நிறுவனர் டாக்டர் ஐசரி கணேசன் வெளியிட்டார். மேலும்
வேளாளர் வரலாற்று நூல்களை பல்வேறு வேளாளர், வெள்ளாளர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பெற்றுக்கொண்டார்கள். வேளாளர் வரலாற்று குறிப்புரையை தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் பேசினார்கள் மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டு தீர்மானங்களை தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்க தலைவர் மற்றும் மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் டாக்டர்
வி.ஜெ. செந்தில் வாசித்தார்.
தீர்மானங்களை கொங்கு சோழ, தொண்டை, பாண்டிய, நாஞ்சில் மண்டல சங்கங்கள் வழிமொழிந்தனர்.
மாநாட்டில்
முடிவில் பாடலூர் மாணிக்கம் நன்றி கூறினார்.
மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வெள்ளாளர், வேளாளர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் என பல ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.