Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எனது விந்து பரிசுத்தமானது எனக்கு கூறி பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட மத போதகர் கைது.

0

'- Advertisement -

கன்னியாக்குமரியில் உடல்நலக் குறைவால் சபைக்கு வந்த பெண் ஒருவரை மதபோதகர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது.

 

இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும் போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.

 

சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார் ரெஜிமோன். இதனால் அந்த பெண் கூச்சலிட்டுக் கொண்டு ஓடிச்சென்று தனது உறவினர்களிடமும், போலீஸிடமும் புகார் கூறியுள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் ரெஜிமோனை கைது செய்துள்ள நிலையில், அவர் சபையிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.