சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு புகார் தொடர்பாக தனிப்படை போலீஸார் விசாரணையின்போது உயிரிழந்தார்.
காவல் துறையினரில் சித்திரவதை யால் மிகவும் கொடூரமான முறையில் ஆவண கொலை செய்யப்பட்ட அஜித்குமாரின் மரணத்திற்காக நேற்று 4/7/ 2025 வெள்ளிக்கிழமை திருச்சி அரசு சட்டக் கல்லூரி மாணவ மாணவிகள் சட்ட கல்லூரி அருகே அஜித் குமாரின் மரணத்திற்கு முறையான விசாரணை நடத்தி நியாயமான நீதி வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.