திருச்சி அருகே கள்ளக்காதலியின் ஐந்து வயது மகனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து, அடித்து, துன்புறுத்திய ஹோட்டல் உரிமையாளர் உட்பட 2 பேர் மீது திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
திருச்சி அருகே உள்ள நாகமங்கலத்தைச் சேர்ந்தவர் நவீனா. இவருக்கு ஐந்து வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவரது கணவர் நவீனா கர்ப்பமாக இருந்த காலத்திலேயே கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இந்தநிலையில் நவீனாவும் அவரது 5 வயது ஆண் குழந்தையும் தனியாக வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நவீனா கே.கே. நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டல் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அவரை அந்த ஹோட்டல் உரிமையாளரான திருச்சி ஏர்போர்ட் வசந்த நகரை சேர்ந்த பஷீர் என்பவரின் மகன் நாசர் அலி (வயது 30) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதில் இருவரும் அடிக்கடி நவீனா வீட்டில் தனிமையில் இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று நாசர் அலி நவீனா வீட்டில் இரவு நவீனாவுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
பின்னர் மறுநாள் காலை அவரது ஐந்து வயது மகனை அவரது நண்பரான நாகமங்கலம் செவன்பட்டியைச் சேர்ந்த காளிமுத்து மகன் வேலுமணி ( வயது 29 ) என்பவனுடன் சேர்ந்து காரில் சுரக்குடி பட்டி பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது, நாசர் அலியும் வேலுமணியும் மது அருந்ததியோடு அந்த சிறு குழந்தையின் வயில் கட்டாயப்படுத்தி மதுவை ஊற்றி உள்ளனர். பின்னர், சிறுவனை அடித்து துன்புறுத்தியதோடு அந்த குழந்தையை பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளனர். இந்த நிலையில் காருக்குள் ஒரு குழந்தையை வைத்து அடித்து, துன்புறுத்துவதை சொரக்குடிப்பட்டி பகுதி மக்கள் பார்த்துள்ளனர்.
ஒரு குழந்தையை கடத்தி வந்துள்ளார்கள் என நினைத்து அவர்களை விராட்டிப்பிடித்து தர்ம அடி கொடுத்து விசாரித்தனர். அப்போது அவர்களிடமிருந்து வேலுமணி அங்கிருந்து தப்பி ஓடி உள்ளான். நாசர் அலி மட்டும் பொதுமக்களிடம் சிக்கி உள்ளான் பின்னர் நாசர் அலிக்கு அப்பகுதி மக்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர்.
பின்னர், இது சம்பந்தமாக உடனடியாக திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி நாசர் அலியை அவர்களிடம் இருந்து மீட்டு வந்து நாசர் அலி மற்றும் வேலுமணி ஆகியோரிடம் விஷால் மேற்கொண்டு அவர்கள் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் வேலுமணியையும் ஆய்வாளர் மங்கையர்கரசி கைது செய்ததோடு இருவரையும் திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிமன்ற உத்தரவின் படி இரண்டு நபர்களையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.