திருச்சியில் ஈஸ்டர் பொதுக்கூட்டத்திற்கு முட்டுக்கட்டை யிடம் இனிகோ இருதயராஜ் எம் எல் ஏ . இந்திய கிறிஸ்தவ ஜனநாயக கட்சி நிறுவனர் கிறிஸ்து மூர்த்தி
கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்படுவதற்கு
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு பதிலடி கொடுப்போம்
இந்திய கிறிஸ்தவ ஜனநாயக கட்சி தலைவர் பேட்டி.

இந்திய கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் நிறுவனர் கிறிஸ்து மூர்த்தி திருச்சியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய கிறிஸ்தவ ஜனநாயக கட்சி சார்பில் ஈஸ்டர் தின விழா மற்றும் ஆண்டு விழா ,நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா திருச்சி புத்தூர் நான்கு ரோட்டில் வருகிற 20 ஆம் தேதி நடைபெற உள்ளது . இதற்காக உறையூர் காவல் நிலையத்தில் அனுமதி கேட்டு மனு கொடுத்தோம்.ஆனால் கிறிஸ்தவ நல்ல நாயக்க தலைவர் , கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இனிக்கோ இருதயராஜின் அரசியல் சூழ்ச்சி காரணமாக போலீசார் அனுமதி தர மறுத்துவிட்டனர்.சிறுபான்மை மக்களுக்கு தற்போதைய திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை.சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுக்கும் எங்கள் இந்திய கிறிஸ்தவ ஜனநாயக கட்சி விழாவிற்கு அனுமதி இல்லை என்றால் இனியும் திமுகவை நாங்கள் நம்ப மாட்டோம்.திமுக ஆட்சியில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்படுகிறது.இதற்கெல்லாம் வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் தக்க பதிலடி கொடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.