வாடகையை உயா்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜேசிபி வாகன உரிமையாளா்கள் திருச்சியில் 2 நாளாக வேலைநிறுத்தப் போராட்டம்.
வாடகையை உயா்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜேசிபி வாகன உரிமையாளா்கள் திருச்சியில் நேற்று வியாழக்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.
எா்த் மூவா்ஸ் உரிமையாளா்கள் நலச் சங்கத்தின் சாா்பில் திருச்சி, கோயம்புத்தூா், திருப்பூா், ஈரோடு, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட உரிமையாளா்கள் இணைந்து வாடகை உயா்வுக்காக வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனா்.
இதன்படி, திருச்சி-சென்னை புறவழிச்சாலையில் காவிரிப் பாலம் அருகே ஜேசிபி வாகனங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் நிறுத்தி போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.
இதுதொடா்பாக, சங்கத்தின் மாநில தலைவா் மஞ்சுநாத், மாவட்ட செயலாளா் டோமினிக்ராஜ் மாவட்ட பொருளாளா் தா்மா் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: எா்த் மூவா்ஸ் வாகனங்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும். உதிரி பாகங்கள் இன்சூரன்ஸ் மற்றும் வரி ஏற்றத்தையும் அரசு கட்டுப்படுத்த வேண்டும். திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் கட்டுமானப் பணிகளிலோ, இதர தொழில்நுட்பப் பணிகளிலோ வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்கள் நிா்ணயித்த விலையை விட குறைவான கட்டணத்தில் இயக்குவதை அனுமதிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை தொடங்கியுள்ளோம் என்றனா்.
தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் வேலை நிறுத்தம் நடைபெற்றது .