திருச்சி அருகே தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வியாபாரி தற்கொலை செய்து கொண்டார் .
போலீசார் விசாரணை
திருச்சி மாவட்டம் லால்குடி ஆங்கரை கே.என். ராசி நகர் பகுதியில் சேர்ந்தவர் அருண் பிரசாத் (வயது 39) இவர் பல்வேறு நிறுவனங்களின் உணவுப் பொருட்களை விநியோகம் செய்யும் ஏஜென்சி நடத்தி வந்தார். இதற்காக அவரது வீட்டின் அருகாமையில் குடோன் அமைக்கப்பட்டது.
பின்னர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது இதில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அருண் பிரசாத்
தனது குடோனில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் . இது குறித்து அவரது மனைவி கலைவாணி லால்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் லால்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.