திருவரங்கத்தில் தனியார் நிறுவனத்தில் புகுந்து வயர் திருடிய வாலிபர் கைது .
திருவரங்கம் புலி மண்டபம் ரோடு ராயர் தோப்பு பகுதியில் தனியார் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் கடந்த 16 ந்தேதி ஒரு வாலிபர் உள்ளே புகுந்து அங்கிருந்த 5 அடி காப்பர் வயரை திருடி கொண்ட செல்ல முயன்றார். அப்பொழுது அந்த கம்பெனியின் உரிமையாளர் ரமேஷ் பரத்ராஜ் என்பவர் பார்த்து உடனடியாக திருவரங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்து திருவரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வாலிபர்ரை பிடித்து விசாரணை செய்தபோது அவர் பெயர் மதன்குமார் (வயது 20) அம்மா மண்டப ரோடு பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மதன்குமாரை கைது செய்துள்ளனர்.