சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டி: பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி . வரலாற்றை மாற்றிய புள்ளி விபரம் .
நியூசிலாந்துக்கு எதிராக நடந்த சாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி திரில் வெற்றிபெற்று உள்ளது.
சீட் நுனியில் அமர வைக்கும் அளவிற்கு திரில்லாக சென்ற ஆட்டத்தில் இந்திய அணி வென்றுள்ளது. 49 ஓவரில் 254-6 ரன்கள் எடுத்து 1 ஓவர் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றுள்ளது.
இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல். ராகுல் (வி.கே.), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் ஆடினர் .
நியூசிலாந்து அணியில், வில் யங், ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம், க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), நாதன் ஸ்மித், கைல் ஜேமிசன், வில்லியம் ஓர்ர்கே ஆகியோர் விளையாடினர் .
இந்த ஆட்டத்தில் இந்திய அணி மீண்டும் டாஸ் தோல்வி அடைந்தது. நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இதன் மூலம் 15 போட்டிகளில் தொடர்ச்சியாக இந்திய அணி டாஸ் தோற்று உள்ளது. ஒரு காயின் டாஸை தொடர்ச்சியாக 15 முறை தோற்பது மிகவும் கடினம் ஆகும். ரோஹித் சர்மா டாஸ் தோற்றது இந்திய அணிக்கு சிக்கல் ஆனது.
அதன்படியே தொடக்கத்தில் பாஸ்ட் பவுலிங்கில் நியூசிலாந்து அணி சிறப்பாக ஆடியது. வேகமாக 60 ரன்களை எடுத்து இந்திய அணிக்கு பிரஷர் போட்டனர். ஆனால் அதன்பின் வருண் சக்ரவர்த்தி களமிறங்கி.. அவர் ஓவரில் இருந்தே ஆட்டத்தை மாற்றினார். முதல் 2 பந்துகள் விக்கெட் அருகே சென்று.. பின்னர் அதே ஓவரில் 5வது பந்தில் விக்கெட் எடுத்தார்.
அதன்பின் வந்த ஜடேஜா, குல்தீப் என்று மாறி மாறி விக்கெட் எடுத்தனர். வருண் 2, குல்தீப் 2, ஜடேஜா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். மிடில் ஆர்டரில் டேரில் மிட்செல் 63, மைக்கேல் பிரேஸ்வெல் 53 ரன்களை எடுத்து ஆட்டத்தை கொஞ்சம் சரிவில் இருந்து மீட்டனர். இதனால் 50 ஓவரில் நியூசிலாந்து அணி 251/7 ரன்கள் எடுத்தது
அதன்பின் இறங்கிய இந்திய அணியில் இந்த முறை ரோஹித் கவனமாக ஆடினார். பைனல் முக்கியம் என்பதால் பொறுப்பை உணர்ந்து ஆடினார் . 83 பந்தில் 3 சிக்ஸ், 7 பவுண்டரி என்று 76 ரன்கள் எடுத்தார். 105 ரன்கள் வரை இந்திய அணி விக்கெட் இழக்காமல் ஆடியது. ஆனால் அதன்பின் அடுத்தடுத்து 7 ஓவர்கள் கேப்பில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
சுப்மான் கில், 18.4 ஓவரில் அவுட் , விராட் கோலி, 19.1 ஓவரில் அவுட்.), ரோஹித் சர்மா, 26.1 ஓ. என்று 7 ஓவரில் ஆட்டமே மாறியது. 105 ரன்களுக்கு விக்கெட் இல்லாமல் 122 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற நிலை வந்தது. ஆனால் அதன்பின் ஷ்ரேயாஸ் 48, அக்சர் பட்டேல் 29 என்று ஆட்டத்தை மாற்றினர்.

கடைசியில் ஹர்திக் பாண்டியா, கே எல் ராகுல் எப்போதும் போல கடைசி கட்டத்தில் அதிரடி காட்டினர். இதன் மூலம் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த சாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி திரில் வெற்றிபெற்று உள்ளது.
சீட் நுனியில் அமர வைக்கும் அளவிற்கு திரில்லாக சென்ற ஆட்டத்தில் இந்திய அணி வென்றுள்ளது. 49வது ஓவரில் 254-6 ரன்கள் எடுத்து 1 ஓவர் மீதம் இருக்க 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றுள்ளது.
1983 – 2024 ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு கண்டம் என்று பயமுறுத்தும் வரலாற்றை இன்று இந்திய அணி மாற்றி காட்டியது . அதன் விபரம் :-
ஞாயிற்றுக்கிழமை இந்திய அணிக்கு ராசியற்ற ஒன்றாக இருந்து வருகிறது. ஏனெனில் 1983 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை சனிக்கிழமை தோற்கடித்து இந்தியா வென்றது. 2002 சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டி திங்கள்கிழமை நடந்த நிலையில் மழையால் ரத்து செய்யப்பட்டு கோப்பை பகிர்ந்து கொள்ளப்பட்டது.
2007 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் திங்கள்கிழமை பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா கோப்பையை வென்றது. 2011 உலகக் கோப்பையை சனிக்கிழமையன்று சொந்த மண்ணில் இலங்கையை தோற்கடித்து இந்தியா வென்றதை மறக்க முடியாது. 2013 சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை துவங்கிய போதிலும் மழை குறுக்கே வந்தது.
அதனால் இந்திய நேரப்படி திங்கள்கிழமை நாளன்று இங்கிலாந்தை சொந்த மண்ணில் தோற்கடித்து இந்தியா கோப்பையை வென்றது. சமீபத்திய 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சனிக்கிழமை அன்று தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா கோப்பையை முத்தமிட்டது. ஆனால் 2000 சாம்பியன்ஸ் ட்ராபியில் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அதில் இதே நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதை விட 2003 உலகக் கோப்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவில் மோசமாக இந்தியா தோல்வியை சந்தித்ததை இப்போதும் 90ஸ் கிட்ஸ் இந்திய ரசிகர்களால் மறக்க முடியாது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2014 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் இலங்கை அணியிடம் இந்தியா தோற்றது.
2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியிலும் ஞாயிற்றுக்கிழமை பரம எதிரி பாகிஸ்தானிடம் இந்தியா மோசமாக தோற்றது. இதிலிருந்து வரலாற்றில் நடைபெற்ற ஐசிசி ஃபைனல்களில் ஞாயிற்றுக்கிழமை இந்தியா ஒருமுறை கூட வென்றதில்லை. அதனால் ஞாயிற்றுக்கிழமை இந்திய அணிக்கு ஐசிசி இறுதிப்போட்டிகளில் கண்டமாக இருந்து வந்தது.
இது போக 2000 சாம்பியன்ஸ் ட்ராபி, 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் என நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய ஐசிசி இறுதிப் போட்டிகளில் இந்தியா வென்றதே கிடையாது. இந்த 2 வரலாறும் இந்திய ரசிகர்களுக்கு கவலையை தந்த நிலையில் இந்த வரலாற்றை மாற்றி இந்தியா சாம்பியன் கோப்பையை வென்று உள்ளது இன்று .
இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார் . தொடர் நாயகனாக நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்தரா அறிவிக்கப்பட்டார்.