திருச்சி காந்தி மார்க்கெட்டில் டூவீலரில் புகையிலை பொருட்கள் வாங்கி வந்த நபர் இரு சக்கர வாகனத்துடன் கைது.விற்ற மொத்த வியாபாரி ?
திருச்சி காந்தி மார்க்கெட்டில்
இருசக்கர வாகனத்தில் புகையிலை பொருட்களை வைத்திருந்த வாலிபர் கைது.
திருச்சி கீழக்கடை பஜார் பகுதியில் காந்தி மார்க்கெட் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்பொழுது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை போலீசார் பிடித்து சோதனை செய்த போது அவரிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை செய்தபோது திருச்சி தாராநல்லூர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 33) என்பதும், அவர் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதற்காக வாங்கி வந்ததும் தெரிய வந்தது இதையடுத்து காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் இளங்கோவனை கைது செய்து அவரிடமிருந்து புகையிலைப் பொருட்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் இவர் யாரிடம் இருந்து புகையிலை வாங்கி வந்தார் ( மொத்த வியாபாரி) என்பது குறித்தும் காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .