திருச்சி திமுக போலி சித்த டாக்டர் சுப்பையா பாண்டியன் சிபிசிஐடி வழக்கிலிருந்து வெளியே வர ரூ. 60 லட்சம் செலவு. சிதம்பரத்தில் போலி சான்றிதழ் தயாரித்த கும்பலில் மேலும் 4 பேர் கைது.
சிதம்பரத்தில்
போலி கல்வி சான்றிதழ் தயாரித்த கும்பல் சிக்கியது.
சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை.
சிதம்பரத்தில் போலி கல்வி சான்றிதழ் தயா ரித்த விவகாரத்தில் இருந்த முக்கிய ஏஜெண்டு உள்பட 4 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். அவர்கள் வெளியிட்டுள்ள பரபரப்பு தகவலில் கூறியிருப்பது :
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கோவிலாம் பூண்டி கிராமத்தில் உள்ள வாய்க்கால் பாலம் அருகே முட்புதரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 19ந்தேதி அண்ணாமலை பல்கலைக்கழக கல்வி சான்றிதழ்கள் சிதறி கிடந்தன.இதை கைப்பற்றி ஆய்வு செய்த பல்கலைக்கழக அதிகாரிகள், அவை அனைத்தும் போலி சான்றிதழ்கள் என்று கண்டறிந்த னர். இதுபற்றி பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) பிரபாகர் கிள்ளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் .
அதில், சிதம்பரம் மன்மதசாமி நகர் பகுதியை சேர்ந்த சங்கர் (வயது 37), சிதம்பரம் சேர்ந்த நாகப்பன் (30), அருட் பிரகாசம் ஆகிய 3 பேரும், போலி சான்றிதழ்கள் தயாரித்தது. தெரியவந்தது. இதையடுத்து அவர்களது வீடுகளில் போலீசார் நடத்திய சோதனையில், அங்கிருந்து ஏராளமான போலி சான்றிதழ் கள், பெயர் எழுதப்படாத போலி
சான்றிதழ்கள், அதை தயாரிக்க பயன்படுத்தியலேப்டாப், பிரிண்டர்,போலி முத்திரை, போலி அடையான அட்டைகள், செல்போன் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த விவகாரத்தில் தமிழகம் முழுவதும் போலி கல்வி சான்றிதழ்கள் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து கடலூர் சி.பி. சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி,சித்த மருத்துவம் படித்த 100க்கும் மேற்பட்ட வர்களுக்கு போலி கல்வி சான்றிதழ் வினியோகம் செய்த திருச்சியை சேர்ந்த போலி அகில இந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் சுப்பையா பாண்டியன் (வயது 60) என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், முக்கிய ஏஜெண்டாக சிதம்பரத்தில் வசித்து வந்த கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கவுதமன்
என்ற ஒஸ்தின்ராஜா செயல்பட்டது தெரியவந்தது. இதுதவிர தமிழகம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட ஏஜெண்டுகள்,போலி கல்வி சான்றிதழ்களை விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
இதற்கிடையில் கல்வி சான்றிதழ் பெற்ற 100 பேருக்கும் சம்மன் அனுப்பி போலீசார் விசரணை நடத்தினர். ஏஜெண்டு களையும் அடையாளம் கண்டு வந்தனர்.
இதற்கிடையில் ஒஸ்தின் ராஜா புதுச்சேரி சத்யாநகர் வீடு எடுத்து தங்கி இருந்தது தெரிந்தது.அங்கு சென்றும் சிபிசிஐடி காவல் துறையினர் தேடி வந்தனர் ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்த ஒஸ்தின் ராஜா அவரது கூட் டாளிகள் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக சி. பி.சி.ஐ.டி. போலீசாருக்கு ரக சிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு டாலமுருகன்,
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மாய வேல்,அருள்ராஜ். கண்ணன் மற்றும் போலீசார் பெங்களுர் விரைந்து சென்றனர். பின்னர் அங்குள்ள தங்கும் விடுதியில் பதுங்கி இருந்த ஒஸ்தின் ராஜா (வயது 51), அவரது தம்பி நெல்சன் (வயது 48), எம்.கே.தோட்டத்தை சேர்ந்த தமிழ்மாறன் (53), திட்டக்குடி ராசு தங்க துரை (41) ஆகிய 4 பேரையும் பிடித்து, கடலூருக்கு கொ ண்டு வந்து விசாரணை நடத் தினர்.
சரிமரணையில், ஒஸ்தின் ராஜா மற்றும் அவரது கூட்டா ளிகள் சிதம்பரம் அண்ணா மலை பல்கலைக்கழக பெயரில் உள்ள பி.ஏ., பி.எஸ்சி., பி. காம்., பி.எச்.டி. உள்ளிட்ட பல்வேறு கல்வி சான்றிதழ்களை போலியாக தயாரித்து, ரூ.7 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதுதவிர சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள ஆயுஷ் கல்லூரி பெயரில் சித்தர,யோகா, ஓமியோபதி, யுனானி கல்வி சான்றிதழ்களை ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, சத்தீஸ்கர், புதுசேரி மாநிலங்களிலும் பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்து பல கோடி ரூபாய் சம்பாதித்தது தெரியவந்தது. போலீசார் தேடுவதை அறிந்த உடன் ஒஸ்தின் ராஜா தம்பி நெல்சன், போலி சான்றிதழ் கள்,கணினி உள்ளிட்ட ஆவணங்களை மறைப்பதற்காக அவற்றை வைத்து எரித்து, தடயங்களை மறைத்துள்ளார். தமிழ்மாறன் வங்கி கணக்கில் தான் பெருமளவு பணத்தை ஒஸ்தின் வாங்கி தது வந்தது தெரிய வந்துள்ளது .
தங்கதுரை வேப்பூரில் வைத்திருக்கும் மையத்திலும் கல்வி சான்றிதழ்களை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 15 செல்போன்கள்,8 சிம்கார்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
நெல்சனுக்கு சொந்தமான காரையும் பறிமுதல் செய்தனர்.இந்த வழக்கில் கடந்த நாட்களுக்கு முன்பு சிதம்பரம் கொத்தங்குடி தெருவை சேர்ந்த பல்கலைக்கழகஊழியர் அசோக்குமார் (வயது 45) என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்தவழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான திமுகவைச் சேர்ந்த திருச்சி அகில இந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் எனக் கூறிக் கொள்ளும் போலி சித்த டாக்டர் சுப்பையா பாண்டியன் தமிழகம் முழுவதும் போலிச் சான்றிதழ்களை விநியோகித்து பல கோடி சம்பாதித்தார் . தற்போது ஜாமினில் வெளியே வந்து உள்ள அவர் இதுவரை சி பி சி ஐ டி போலீசார் மற்றும் வழக்கறிஞர்களுக்கு என ரூ.60 லட்சம் வரை செலவு செய்து உள்ளேன் .( மனைவி நகைகளை அடமானம் வைத்து, எனது மகனின் காரை விற்று செலவு செய்து உள்ளேன் என கூறி இருக்கிறார் ) நேர்மையான சி பி சி ஐ டி காவல்துறைை அதிகாரிகள் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் 50 லட்சம் 60 லட்சம் கொடுத்தேன் எனக் கூறியுள்ளார் . மேலும் அமைச்சர் நேருவின் ஆதரவு உள்ளது என அமைச்சர் நேருவின் பெயரை தவறாக பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
தற்போது சென்னையை சேர்ந்த ஒருவர் இவரிடம் ரூ.6 லட்சத்தை கொடுத்து ஏமாந்து உள்ளார், அந்த பணத்தை திருப்பி கேட்ட போது என்னால் தர முடியாது வேண்டுமானால் சிபிசிஐடி போலீசாரிடம் சென்று புகார் சொல் என தெனாவட்டாக பேசியுள்ளார் . பணத்தை இழந்த அந்த நபர் கண்ணீருடன் சென்னை திரும்பி உள்ளார் .( வழக்கில் இருந்து வெளியே வந்ததும் மீண்டும் இதே போன்று போலி சான்றிதழ்கள் விற்பனை செய்யும் பணியில் தொடர்வது போன்றே பேசி வருகிறார் போலி சித்த டாக்டர் சுப்பையா பாண்டியன்.