திருச்சி தெப்பக்குளம்
தபால் அலுவலகத்தில்
தபால் நிலைய அதிகாரியின் செல்போன் திருட்டு

மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு
திருச்சி பாலக்கரை ஹீபர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 58 ) இவர் திருச்சி தெப்பக்குளம் தபால் அலுவலகத்தில் தபால் நிலைய அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பணியில் ஈடுபட்டிருந்த போது அவர் தனது 2 செல் போன்களை அங்குள்ள மேஜை மீது வைத்து உள்ளார். அப்போது தபால் அலுவலகத்திற்குள் நுழைந்த ஒரு மர்ம ஆசாமி அங்கிருந்தவர்களின் கவனத்தை திசைதிருப்பி தங்கராஜன் வைத்திருந்த 2 செல்போன்களையும் திருடி கொண்டு தப்பி சென்று உள்ளார்.
இதுகுறித்து தங்கராஜ் அளித்த புகாரின் பேரில் கோட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜராஜேஸ்வரி வழக்கு பதிவு செய்து செல்போன்களை திருடி சென்ற மர்ம ஆசாமியை வலை வீசி தேடி வருகின்றனர்.