திருச்சி உறையூரில் கடன் தொல்லையால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை.
உறையூர் போலீசார் விசாரணை.

திருச்சி உறையூர் நாடார் தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். குழந்தை இல்லை. இவர் விமான நிலையம் பகுதி காமாட்சி அம்மன் கோவில் அருகே தனது சகோதரர்களுடன் சேர்ந்து டீ, டிபன் கடை நடத்தி வந்தார்.
இந்நிலையில் ஸ்டீபன் சில ஆண்டுகளுக்கு முன் குடும்ப செலவிற்காக கடன் வாங்கியதாக தெரிகிறது. இந்த பணத்தை திருப்பி கட்ட முடியாமல் சிரமப்பட்டதாக தெரிகிறது. இதனால் ஸ்டீபன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அறையில் இரும்பு குழாயில் தூக்கு மாட்டி ஸ்டீபன் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து உறையூர் போலீசார் விரைந்து சென்று ஸ்டீபன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து உறையூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.