திருச்சியில் ஆபாசமாக திட்டி மாணவர்களை அடித்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
திருச்சி காட்டூர் பகுதியில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவர்களை அப்பள்ளியில் அப்பள்ளியில் பணியாற்றும் மகேஷ் என்கிற ஆசிரியர் தகாத வார்த்தைகளால் பேசி கடுமையாக தாக்கியதில் மூன்று மாணவர்களுக்குரத்த காயம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து பள்ளியில் படித்து வரும் மாணவர்களை தகாத வார்த்தைகள் திட்டி ,அடித்த ஆசிரியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின் பிறகு பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவர்களை தாக்கிய ஆசிரியர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
தலைமை ஆசிரியர் உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர் இந்திய மாணவர் சங்கத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாவட்ட தலைவர் சூரியா, மாவட்ட செயலாளர் ஜி.கே.மோகன் கலந்து கொண்டனர் .