Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் மக்கள் மணமாலை அமைப்பை தமிழ்நாடு. திருமண அமைப்பு தொழிலாளர் நல சங்கம் தொடங்கியது.3 சங்கங்கள் இணைந்தது.

0

'- Advertisement -

 

தமிழ்நாடு திருமண அமைப்பு தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக”மக்கள் மணமாலை’ அமைப்பு துவக்கம் மற்றும்

3 சங்கங்கள் இணைப்பு .

 

 

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ்நாடு திருமண அமைப்பு தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது .

 

மாநில துணைத்தலைவர் ஆர்.கே. பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில துணைத்தலைவர்கள் என்.சந்திரசேகரன் ப.சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் மாநில இணை பொது செயலாளர் ஜி.கே. சிவகுமார் வரவேற்று பேசினார்.

 

தலைவர் கோவை கல்யாண சொர்க்கம் கே. ராமசாமி ஐயா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநில அளவில் “மக்கள் மணமாலை” அமைப்பை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார் .

 

Suresh

இக்கூட்டத்தில், அரசு கேட்டுக் கொண்டபடி அனைத்து சங்கங்களையும் முறைப்படுத்தி, மேலும் அமைச்சர் கேட்டுக் கொண்டபடி அனைத்து அமைப்பாளர்களின் எண்ணிக்கையும் 10,000 ஆக உயர்த்தவும் , அனைத்து சங்கங்களின் ஒத்துழைப்பும், ஆதரவோடும் துறை சார்ந்த அமைச்சர் மற்றும் தமிழக முதல்வரை சந்திப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் இந்நிகழ்ச்சியில் என். சந்திரசேகரன் தலைமையில் இயங்கி வந்த ஒருங்கிணைந்த திருமண அமைப்பாளர்கள் சங்கம் மற்றும் ப. சக்கரவர்த்தி தலைமையில் இயங்கி வந்த திருமண அமைப்பாளர்கள் அமைப்புசாரா தொழிலாளர் நல சங்கம், மாரியப்பன் தலைமையில் இயங்கி வந்த சுவாமி திருமண அமைப்பாளர் சங்கம்

ஆகிய மூன்று சங்கங்களும் நேற்று தமிழ்நாடு திருமண அமைப்பு தொழிலாளர் நல சங்கத்தில் இணைந்தது .

 

இக்கூட்டத்தில் ஆர்.கோவிந்தராஜ், எம்.ராஜாமணி , எம் ஏ மாரியப்பன் , ஆறுமுகம், எம்.லட்சுமணன், டி. மேகநாதன்,டி தாமோதரன், கே. விஜயகுமாரி, ஆர். மார்க்கிரேட், புதுக்கோட்டை கண்ணன், மன்னார்குடி பி.டி பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள் .

நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் பொதுச் செயலாளர் வி. ஜெயக்குமார் நன்றி கூறினார் .

Leave A Reply

Your email address will not be published.