கரூர் அருகே
ரெயிலில் அடிபட்டு வட இந்திய வாலிபர் சாவு. தெரிந்தவர்கள் தகவல் தெரிவிக்கலாம்.
திருச்சி ரெயில்வே போலீசார்.
கரூர் ரெயில் நிலையத்திற்கும், மூர்த்தி பாளையம் ரெயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் ரெயில்வே பாதையை கடக்கும் போது அவ்வழியே வந்த ஏதோ ஒரு ரெயிலில் அடிபட்டு படு காயங்களுடன் தண்டவாளம் அருகே கிடந்தார் .
அப்பகுதி சென்ற சிலர் அவரைக் கண்டு மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு படுங்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அந்த நபர் நினைவு திரும்பாமலேயே சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
இறந்தவரின் வலது முன் கையில் கோவிந்த் மற்றும் அனிதா என இந்தி மொழியில் பச்சை குத்தப்பட்டு உள்ளது.
இறந்த வாலிபர் உடல் கரூர் மருத்துவக் கல்லூரி சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இறந்த வாலிபரை பற்றி தகவல் தெரிந்தால் திருச்சி ரயில்வே காவல்துறையினருக்கு 8667 59849 மற்றும் 94434 72524 ஆகிய தொலைபேசி எண்களில் தகவல் தெரிவிக்குமாறு கூறியுள்ளனர்.