திருச்சி கருமண்டபத்தில்
பெண் துப்புரவு பணியாளரிடம் 6 பவுன் செயின் பறிப்பு.
இருசக்கர வாகனத்தில் மர்ம நபர் தப்பி ஓட்டம்.
திருச்சி, கருமண்டபம், ஜெயா நகர் விஸ்தரிப்பைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவரது மனைவி ஜஸ்டின் க்ளாரா (வயது 46).
இவர் இதே கருமண்டபம் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் க்ளாரா சம்பவத்தன்று வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய சென்று கொண்டு இருந்த போது அவரது வீட்டின் அருகே எதிரே இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் க்ளாரா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் மதிப்புள்ள தாலி சங்கலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து க்ளாரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கிளாரா அளித்த புகாரின் பேரில் செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிந்து செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.