போலி பாஸ்போர்ட் :
கர்நாடகத்தைச் சேர்ந்தவர் திருச்சியில் கைது.
கர்நாடகா மாநிலம், பெங்களூர், கோரமங்களா, ராஜேந்திர நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 48). இவர் கடந்த டிச.18ம் தேதி மலேசியா செல்வதற்காக திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தார்.
அங்கு இம்மிகிரேஷன் பிரிவு அதிகாரிக் மேற்கொண்ட சோதனையில் அவர் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து பிறந்த தேதி மற்றும் பிறந்த ஊர் ஆகியவற்றை மாற்றிக்கொடுத்து போலி பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது.
இது குறித்து இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிந்து கிருஷ்ணனை கைது செய்தனர்.