காந்தி மார்க்கெட் அருகே நடந்து சென்ற பெண்ணிடம்
5 பவுன் தாலி செயின் பறிப்பு.
மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிக்கு வலை வீச்சு .
திருச்சி
தாராநல்லூர் விஸ்வாஸ் நகரை சேர்ந்தவர் நரேன் . இவரது மனைவி கீர்த்தனா (வயது 34).இவர் நேற்று முன்தினம் காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட ஏபி நகர் 2வது தெருவில் உள்ள
தங்கை வீட்டிற்கு பஸ்சில் ஏறி வந்து வீட்டின் அருகில் உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்பொழுது திடீரென்று பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் இரண்டு மர்ம
ஆசாமிகள் வந்துள்ளனர்.
இந்நிலையில் சாலையில் யாரும் இல்லாத நேரத்தில் கீர்த்தனா அருகில் வந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் 2 மர்ம ஆசாமிகள் மின்னல் வேகத்தில் பறந்து விட்டனர்.
இதில் அதிர்ச்சி அடைந்த கீர்த்தனா இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கீர்த்தனாவின் 5 பவுன் தாலி செயினை பறித்து சென்ற இரண்டு மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.