திருச்சி அருகே ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத நபர் பலி.
திருச்சி அருகே மாத்தூர் தனியார் கல்லூரி பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.
இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது உடனடியாக தெரியவில்லை.
காவி நிற லுங்கியும், கருப்பு கலர் துண்டும் அணிந்திருந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த திருச்சி ரயில்வே போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர் குறித்து தகவல் அறிந்தவர்கள் ரயில்வே போலீசாரிடம் தகவல் தெரிவிக்க கூறியுள்ளனர் .