திருச்சியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் 2 பேர் கைது . ஒருவருக்கு வலை .
திருச்சியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் 2 பேர் கைது .
திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக திருச்சி மாநகராட்சி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாநகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரி கதிர்வேல் தலைமையில் குழுவினருக்கு திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் உள்ள செல்லம் ஸ்டோர் வீட்டில் சிலர் புகையிலைப் பொருட்களை வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரி கதிர்வேல் தலைமையில் குழுவினர் அங்கு சென்று பார்த்த பொழுது செல்வம் வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இவற்றின் மதிப்பு ரூபாய் 25 ஆயிரம் ஆகும்.இது குறித்து கதிர்வேல் கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மேல சிந்தாமணியை சேர்ந்த மணிகண்ட பிரபு (வயது 27) ராஜா மணி (வயது 36) ஆகிய இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
மேலும் மனோகர் என்பவரை தேடி வருகின்றனர்.