மாநில அளவிலான வாய், முகம், தாடை அறுவை சிகிச்சை நிபுணர்களின் 16 வது மாநில மாநாடு திருச்சியில் நடைபெற்றது.
திருச்சியில் வாய், முகம், தாடை அறுவை சிகிச்சை நிபுணர்களின் 16 வது மாநில மாநாடு – 400 க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர் .
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த வாய், முகம், தாடை அறுவை சிகிச்சை நிபுணர்களின் 16 வது மாநில மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் தொடங்கியது.
இதில் விபத்து காலங்களில் மேற்கொள்ள வேண்டிய அறுவை சிகிச்சைகள் குறித்து நிபுணர்களுடன் கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இரண்டாவது நாளாக இன்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
முன்னதாக நேற்று முன்தினம் திருச்சியில் உள்ள காவேரி மருத்துவமனை, ரத்னா குளோபல் மருத்துவமனை, ஹர்ஷமித்ரா மருத்துவமனை, பிரண்ட்லைன் மருத்துவமனை மற்றும் முகேஷ் கேர் மருத்துவமனை, கி.ஆ.பெ மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கான ஏற்பாடுகளை மாநாட்டு குழு தலைவர் டாக்டர் ராஜ்மோகன், செயலாளர் அபிஷேக் மற்றும் மருத்துவர்கள் சுப்பிரமணியன், அழகப்பன் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.