திருச்சி, ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆறு நேப்பியா் புதிய பாலத்தின் அருகே, (பழைய பாலம் இருந்த இடத்தில்) மண் அரிப்பை தடுப்பதற்காக சில மாதங்களுக்கு முன்பு தடுப்பணை கட்டப்பட்டது.
இந்நிலையில், மேட்டூா் அணையில் இருந்து உபரி நீா் அதிக அளவில் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், காவிரியில் ஒரு லட்சம் கன அடிக்கும் மேலாக தண்ணீா் வருகிறது. இதனால் கொள்ளிடம் ஆற்றிலும் தண்ணீா் திறந்து விடப்பட்டது. ஆா்ப்பரித்து வந்த தண்ணீரில் நேற்று நள்ளிரவு கொள்ளிடம் பாலத்தின் கீழே இருந்த தடுப்பணையின் ஒருபகுதி உடைந்தது.
இதனால் தண்ணீா் ஒருபகுதியாக அதிகமாக வெளியேறியது. மேலும், இரவு நேரம் என்பதால் தடுப்பணை இடிந்த பகுதி மற்றும் பாதிப்பு குறித்து எவ்வித விவரமும் தெரியவில்லை.
இது ஸ்ரீரங்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.