ஆய்வக நுட்புனர் வார விழா ஓவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி தமிழ்நாடு மெடிக்கல் லேபரட்டரிஸ் அசோசியேசன் சார்பில் திருச்சி அம்பிகாபுரம் பகுதியில் உள்ள மெர்குரி டயக்னஸ்டிக் ஸ்கேன் சென்டரில் உலக ஆய்வக நுட்புனர் வார விழா கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு மெடிக்கல் லேபரட்டரிஸ் அசோசியேசன் மாவட்ட தலைவர் மார்ட்டின் தேவதாஸ் ,மாவட்ட செயலாளர் லோகநாதன், மாவட்ட பொருளாளர் ராஜகோபால், மாவட்ட அமைப்பாளர் பசுபதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சவரிமுத்து மற்றும் டாக்டர் தேவசேனா ஆகியோர் கலந்து கொண்டு ஆய்வக நுட்புனர் திறன் மேம்பாடு மற்றும் ஆய்வகத்தின் தன்மைகள் குறித்து சிறப்பு உரையாற்றினர்.
கூட்டத்தில் ஆய்வக நுட்புனர் அமைப்பை மேம்படுத்தும் வகையில் லேப் டெக்னீசியன் கவுன்சில் அமைக்க தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு பகுதிகளில் இருந்து ஆய்வக நுட்புனர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர். முன்னதாக கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது.
கூட்ட முடிவில் செந்தில்குமார் நன்றி கூறினார்.