மழைத் தொழுகை திருச்சி பாலக்கரை வட்டார ஜமாஅத்துல் உலாமா சபை கூட்டாக அறிக்கை.
தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் தமிழக முழுவதும் மஞ்சள் அலாட் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் திருச்சியில் தினம் தோறும் வெயிலின் வெப்ப அலை வீசக்கூடும் என்று வானிலை அறிக்கை கூறியிருக்கிறது.
இதை தொடர்ந்து இஸ்லாமிய அமைப்புகள் ஒன்று கூடி ஆங்காங்கே தொழுகைகள் நடத்தி வருகிறார்கள், அதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை வட்டார உலாமா சபை மிகப்பெரிய அளவில் நாளை (27-4.-24) காலை 6.30 மணி அளவில் பிரபாத் ரவுண்டானா அருகில் உள்ள மைதானத்தில்
சிறப்பான மழை தொழுகை நடத்த ஏற்பாடு செய்து வருகின்றது.
இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் இந்த தொழுகையில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என உலாமாக்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .