திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் கடத்த முயன்ற ரூ.13.61 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல் .
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கடத்த முயன்ற ரூ. 13.61 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டுப் பணத்தாள்களை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் துபாய் செல்ல இருந்த பயணிகளின் உடைமைகளை திருச்சி வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனா்.
அப்போது ஒரு பயணி உரிய அனுமதியின்றி வைத்திருந்த ரூ. 8 லட்சத்து 4 ஆயிரத்து 200 இந்திய மதிப்பிலான 18,000 யுஏஇ திா்ஹாம், 5,000 அமெரிக்க டாலா்களையும்,
மற்றொரு பயணி வைத்திருந்த ரூ. 5 லட்சத்து 57 ஆயிரத்து 500 மதிப்பிலான 25,000 யுஏஇ திா்ஹாம்கள் என மொத்தம் ரூ. 13 லட்சத்து 61 ஆயிரத்து 700 மதிப்பிலான வெளிநாட்டுப் பணத்தாள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.