திருச்சியில்
கிரிக்கெட் விளையாட்டினை அடிப்படையாகக்கொண்டு கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு மற்றும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
திருச்சி கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் கிரிக்கெட் விளையாட்டு போட்டியை அடிப்படையாகக்கொண்டு கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வுடன் பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் மகாத்மா கண் மருத்துவமனையின் கண் அழுத்த நோய் மருத்துவர் பிரசன்னா வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தலைமை கண் நீர் அழுத்த நோய் நிபுணர் வினோத் அருணாச்சலம் கலந்து கொண்டு முகாமிற்கு வருகை தந்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்,
அப்போது செய்தியாளர்களை சந்தித்து மருத்துவர் பிரசன்னா வெங்கடேசன் கூறுகையில் ,
கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு மார்ச் 7ஆம் தேதி முதல் மார்ச் 13 வரை நடைபெறும்.
கண் நீர் அழுத்தம் என்பது நமது கண் பகுதியில் பிரஷர் என்பது 10 முதல் 20 வரைக்கும் இருக்க வேண்டும் ஆனால் கண் நீர் அழுத்தம் வரும் பொழுது பிரஷர் இருபதுக்கு மேல் செல்லும் அப்பொழுது கண்ணில் இருக்கக் கூடிய நரம்புகள் பாதிப்படைந்து பக்கவாட்டில் இருக்கக்கூடிய பார்வைகள் நிரந்தரமாக இழக்கக்கூடும்,
இந்த நோயானது நமது குடும்பத்தில் உள்ள அப்பா, அம்மா அல்லது தாத்தா ,பாட்டி யாரேனும் ஒருவருக்கு இருந்தால் அவர்களின் குடும்பத்தை சார்ந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்வது மிகவும் நல்லது,
குறிப்பாக 30 வயது முதல் 35 வயது மேற்பட்டவர்களுக்கு இந்த கண் நீர் அழுத்த நோய் தென்பட ஆரம்பமாகிறது, ரத்த சம்பந்தமான உறவுகளுக்கு இருந்தால் குடும்பத்துடன் அனைவரும் கண் நீர் அழுத்த நோய் பரிசோதனை செய்து கொள்வது நல்லது, கண் நீர் அழுத்த நோய் இரண்டு பிரிவுகளாக உள்ளது ,அதற்காக மகாத்மா கண் மருத்துவமனை சார்பாக கண் நீர் அழுத்த நோய் பரிசோதனை, கருவிழி தடிமன் பரிசோதனை, சுற்றளவு பார்வை பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது பரிசோதனை முகாமில் 231 நபர்களுக்கு மேல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர், கண் நீர் அழுத்த நோய் நிர்ணயம் செய்யப்பட்ட அவர்களுக்கு இலவச சொட்டு மருந்து வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியின் இறுதியில் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பைகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டது.