Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருவானைக்காவல் அடிமனை உரிமை மீட்பு ஆலோசனைக் கூட்டத்தில் பொதுமக்களை திரட்டி உண்ணாவிரதம் இருக்க முடிவு .

0

'- Advertisement -

 

திருவானைக்காவல் அடிமனை உரிமை மீட்பு கூட்டத்தில் பொதுமக்களை திரட்டி உண்ணாவிரதம் இருக்க தீர்மானம் .

திருவானைக்காவல் அடிமனை உரிமை மீட்பு சம்பந்தமாக இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டம் திருவானைக்காவலில் உள்ள சுமங்கலி மஹாலில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில இணைச்செயலாளரும்,தலைவருமான மாரி என்கிற எம். பத்மநாதன் தலைமையில் நடைபெற்றது’

துணைத் தலைவர்கள் மனோகரன்,விசுவலிங்கம், மனோகர், குமரேசன் கண்ணன் சுரேஷ், மீனாட்சி சுந்தரம், துரைராஜ், டைமன் திருப்பதி, ரவிக்குமார், செயலாளர் குரு சுப்ரமணியன் என்கிற சந்தோஷ் ,துணை செயலாளர்கள் ஐயப்பன், பிரஸ் வெங்கடேசன், வி.என்.ஆர்.செல்வம், முருகானந்தம் சிவஞான பிரபு, ஆறுமுகம், சேகர் சத்தியமூர்த்தி குமார் சுந்தர் , பொருளாளர் பசுபதி,ஆலோசனை தலைவர்கள் கலைமணி, பரமசிவம் தீட்சிதர் பாலு, பழனியப்பன், இங்கர்சால், சந்திரசேகர், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் கவுன்சிலர் அப்பீஸ் முத்துக்குமார், கனகராஜ், காமராஜ் ராஜ், கார்த்திகேயன், தசரதராமன், ஸ்ரீதேவி ஆயில் மில் சாமிநாதன், கருப்பையா, குமாரவேலு, ஆலோசகர்கள் வழக்கறிஞர் பாலு மகேந்திரன். வழக்கறிஞர் யமுனா பாலு மகேந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். இதில் அடிமனை பிரச்சனை சம்பந்தமாக விரைவில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுவதற்கு உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.