மலைக்கோட்டையில் மது போதையில் காதல் மனைவியை தாக்கிய தொழிலாளி கைது.
திருச்சி துறையூர் பி மேட்டூர் ஆசாரி தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜீவன் ராஜ் (வயது 25). இவரும் திருச்சி மேல சிந்தாமணி சுப்பிரமணியர் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த சுகன்யா (வயது 28 ) என்பவரும் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தனர்.
இந்த தம்பதியருக்கு இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை.
இதில் மனைவி திருச்சி நந்தி கோவில் பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையிலும் அவரது கணவர் ஜீவன்ராஜ் அருகாமையில் உள்ள இன்னொரு ஜவுளிக்கடையிலும் பணியாற்றி வருகின்றனர் .
இந்த நிலையில் மதுவுக்கு அடிமையான ஜீவன் ராஜ் அடிக்கடி குடிபோதையில் மனைவியிடம் சண்டை போட்டு வந்துள்ளார்.2 தினங்களுக்கு முன்பு வழக்கம் போல் பணி முடிந்து வீடு திரும்பிய சுகன்யாவை நந்தி கோவில் தெரு பகுதியில் வைத்து ஜீவன் ராஜ் வழிமறித்து அவரது செல்போனை பறித்து விட்டு கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சுகன்யா கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.