திருச்சியில் கஞ்சா விற்ற கணவன் மனைவி உள்பட 4 பேர் கைது.
திருச்சி -சென்னை பைபாஸ் சாலையில் கஞ்சா விற்கப்படுவதாக காந்தி மார்க்கெட் போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொழுது 2 பேர் போலீசாரை பார்த்தவுடன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். இதையடுத்து போலீசார் அந்த 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரித்த போது திருச்சி தாராநல்லூர்ரை சேர்ந்த சிவகுமார் (வயது 25) இவரது மனைவி சத்யா (வயது 21) என்பது தெரியவந்தது.
இவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திய போது இருவரும் அந்த பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களிடம் இருந்து 2,200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து கார்,மோட்டார் சைக்கிள்,ரூபாய் 90 ஆயிரம் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதேபோன்று திருச்சி பாலக்கரை மணல் வாரி துறை ரோடு பகுதியில் கஞ்சா விட்டுக் கொண்டிருந்த சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 54)சேட்டு (வயது 30 )ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து அவர்களிடம் இருந்து 1100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.