ஷாா்ஜாவிலிருந்து வெள்ளிக்கிழமை திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்த ஏா் இந்தியா விமானப் பயணிகளையும், அவரது உடைமைகளையும் மத்திய வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம்போல் சோதனையிட்டனா்.
இதில், ஒரு ஆண், ஒரு பெண் பயணியிடம் நடத்திய சோதனையில், அவா்கள் 1.485 கிலோ எடையுள்ள சுமாா் ரூ. 93.22 லட்சம் மதிப்பிலான தங்கத்தை நூதன முறையில் தங்களது உடலில் மறைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.
இவற்றைப் பறிமுதல் செய்த சுங்கத்துறையினா், இருவரையும் திருச்சி விமான நிலையப் போலீஸாரிடம் ஒப்படைத்ததுடன், தங்கம் கடத்தல் தொடா்பாக விசாரித்து வருகின்றனா்.