திருச்சி: டிடோஜாக் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் வரும் 27ம் தேதி 1000 ஆசிரியர்கள் உண்ணாவிரத்தில் பங்கேற்க முடிவு.
1000 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் ஜனவரி 27 ஆம் தேதி டிட்டோஜாக் சார்பான மாவட்ட அளவிலான உண்ணாவிரத்தில் பங்கேற்க கூட்டத்தில் முடிவு.
திருச்சிராப்பள்ளி மாவட்ட டிடோஜாக் சங்கங்களின் மாவட்ட, வட்டார நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி அரசு சையது முதுர்ஷா மேல்நிலைப் பள்ளியில்
கோ.நாகராஜன், பெ.ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது..
செல்வகுமார், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் தோழமை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு பல்வேறு கருத்துகளை பதிவு செய்தனர்.
வருகிற ஜனவரி 27 ஆம் தேதி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
அருகில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் திருச்சி மாவட்டத்திலிருந்து சுமார் 1000 ஆசிரியர்களை பங்கேற்க செய்வதற்கான நடவடிக்கையை வட்டாரங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பாளர்கள் அனைத்து இயக்கங்களின் பொறுப்பாளர்களையும் தொடர்பு கொண்டு
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முடிவாற்றப்பட்டது.
இக்கூட்டத்தில்
டிட்டோஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்
மாநில பொருளாளரும், திருச்சி மாவட்ட செயலாளருமானசே நீலகண்டன் பல்வேறு கருத்துகளை வழங்கி நிறைவுரை ஆற்றினார்..
ஆரோக்கியராஜ் நன்றியுரை ஆற்றினார்