திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இறந்த வாலிபரன் உடலுடன் உறவினர்கள் போராட்டம் . போக்குவரத்து பாதிப்பு
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிக்னலால் விபத்து ; சிகிச்சை பலனின்றி இளைஞர் உயிரிழப்பு – உயிரிழந்த இளைஞரின் உடலுடன் உறவினர்கள் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்.
திருச்சி திருவரம்பூர் அருகே உள்ள சர்க்கார் பாளையம் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரது மகன் விக்னேஷ் என்பவர் ஜனவரி 11ஆம் தேதி வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய போது சஞ்சீவி நகர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது லாரி மோதி கடுகாயமடைந்தார்.
அன்றைய தினமே சஞ்சீவி நகர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிக்னலை அகற்ற வேண்டும் இதனால் விபத்து அடிக்கடி நடக்கிறது எனக் கூறி திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையை மரித்து 200க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி விக்னேஷ் என்ற இளைஞர் உயிரிழந்து விட்டார் இன்று அவரது உடல் உடற்குறைவு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
உயிரிழந்த விக்னேஷ் என்ற இளைஞரின் உடலை திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வைத்து தற்பொழுது உறவினர்கள் உள்ளிட்ட சுற்றியுள்ள பதினைந்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் திருச்சி சஞ்சீவி நகர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பிக்கப்பட்டுள்ளது