Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எஸ் ஆர் எம் யூ 4வது நாள் உண்ணாவிரத போராட்டத்தில் 30 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தென் மண்டல தலைவர் ராஜா ஸ்ரீதர் பேட்டி .

0

'- Advertisement -

 

நாடு முழுவதும் பிப்ரவரி 16-ந் தேதி

அனைத்து ரெயில்வே தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து வேலை நிறுத்த போராட்டம்.

எஸ்.ஆர்.எம்.யூ தலைவர் ராஜா ஸ்ரீதர் பேட்டி.

தென்னக ரயில்வே சார்பில் பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் . புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். தனியார் மயமாக்கலை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு எஸ்.ஆர்.எம்.யு சார்பில் கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நான்காவது நாளான இன்று நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு தென்னக ரயில்வேயின் தென் மண்டல தலைவர் ராஜா ஸ்ரீதர் தலைமை தாங்கினார் .

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற அவர் பேசியதாவது:-
மத்திய அரசுக்கு இந்த உண்ணாவிரத போராட்டம் என்பது ஒரு முன்னோட்டமாக நடத்தப்படுகிறது எனவே பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தனியார் மயமாக்களை கைவிட வேண்டும். குறைந்த ஓய்வூதியத்தை அதிகப்படுத்தி வழங்கிட வேண்டும். என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம். நாடு முழுவதும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 30 லட்சம் தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வருகின்ற பிப்ரவரி 16-ந்தேதி நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள் .
இவ்வாறு அவர் கூறினார்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் எஸ். ஆர்.எம் யு. மாநில துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் மற்றும் நிர்வாகிகள், ஊழியர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.