திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நல்லொழுக்க பயிற்சி முகாமில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு .
தவ்ஹீத் ஜமாத் சார்பில் நல்லொழுக்க பயிற்சி முகாம்.
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பாக மண்டல தர்பியா (நல்லொழுக்க பயிற்சி முகாம்) திருச்சியில் நடைபெற்றது.
முகாமிற்கு மாநில பொதுசெயலாளர் ஆர்.அப்துல் கரிம் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் சமுதாய பணிகளை வீரியபடுத்தவும், ரத்த தான பணிகளை முறைப்படுத்தி வீரியப்படுத்தவும், பேரிடர் கால பணிகளை எப்படி விரைந்து செயல்படுத்துவது, மது, வட்டி, புகை, வரதட்சனை மற்றும் போதை போன்றவற்றுக்கு எதிராக பிரச்சார பணிகளை தீவிர படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் மாநில செயலாளர்கள் அன்சாரி, காரைக் கால் யூசுப், மாநில மேலாண்மைக்குழு தலைவர் சம்சுல்லுஹா , மேலாண்மைக்குழு உறுப்பினர் சபிர் அலி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
பயிற்சி முகாமில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முடிவில் மாநில துணை பொதுசெயலாளர் முஜிப் ரஹ்மான் நன்றி கூறினார்.