ஸ்ரீரங்கத்தில்
புகையிலை பொருட்கள் விற்ற வியாபாரி கைது.
ஸ்ரீரங்கம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக தகவல் வந்ததையடுத்து, திருச்சி மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் கதிர்வேல் தலைமையிலான அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு கடையில் சோதனை நடத்திய போது அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக் ,குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவைகளை போலீசாரின் உதவியுடன் பறிமுதல் செய்தனர். பின்னர் கடையின் உரிமையாளர் கணேசன் என்பவரை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர்.