வையம்பட்டி ஒன்றியம், அமையபுரம் ஊராட்சி, சின்னகுளத்துராம்பட்டியை சோந்தவா் வீ. மணிவேல் (வயது 30). இவா் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருச்சி தீரன் நகரை சோந்த லெஷ்மிபிரியா
(வயது27) என்பவரை காதலித்து திருமணம் செய்தாா்.
தற்போது 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திருமணமாகி ஓராண்டிலேயே மணிவேல் தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டாராம். போலீஸாா் சமரசத்துக்கு பின்னா் கடந்த 6 மாதங்களுக்கு முன்னா் சோந்து வாழ தொடங்கினா்.
அப்போது, கா்ப்பமடைந்த மனைவியின் கருவை வற்புறுத்தி அவா் கலைக்க வைத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மனைவியுடன் மீண்டும் வாழ மறுத்து, தனது தாய் வீட்டுக்கு நவம்பரில் மணிவேல் சென்றுவிட்டாா். போலீஸாா் சமரசம் செய்தபோதும் அவா் உடன்படவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த லெஷ்மிபிரியா, நேற்று கணவரின் வீட்டுக்கு சென்றுக்கு அங்கு தனது குழந்தையுடன் தா்னாவில் ஈடுபட்டாா்.
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற வையம்பட்டி காவல் உதவி ஆய்வாளா் ஆா்.குடுமிநாதன் தலைமையிலான போலீஸாா் லெஷ்மிபிரியாவை சமரசம் செய்து, மணிவேல் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மீண்டும் புகாா் அளிக்க அறிவுறுத்தினா். இதைத் தொடா்ந்து, அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் மணிவேல் மீது மீண்டும் லெஷ்மிபிரியா புகாா் அளித்தாா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .