திருச்சி கருமண்டபம்
இளங்காட்டு மாரியம்மன் கோவில் திருப்பணிகள்
பூமி பூஜையுடன் இன்று தொடங்கியது.
திருச்சி கருமண்டபத்தில் இளங்காட்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருப்பணி மற்றும் கட்டிட விரிவாக்க பணிக்காக இன்று பூமி பூஜை நடந்தது. இதையடுத்து பூர்வாங்க பூஜைகளுடன் பணிகள் தொடங்கின.
இந்த பூமி பூஜை நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் ஆறு மாத காலத்திற்குள் இந்த திருப்பணிகளை செய்து முடிக்க நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர்.