தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் முகத்தில் கரியை பூசி கொண்டு போராட்டம்
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க நிறுவனத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி அண்ணா சிலை அருகே தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
27ம் நாளான இன்று மத்திய மாநில அரசுகள் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்காமல் ஏமாற்றி முகத்தில் கரியை பூசி விட்டார்கள் என கூறி முகத்தில் கரியை பூசிக்கொண்டு அரை நிர்வாணத்துடன் நூதன முறையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கத்தின் மாநில தூ.தலைவர் பரமசிவம்,மாநில செயலாளர்கள் சாமி மனோகர், ஜான் மில்கியோகராஜ், மாநில செய்தி மக்கள் தொடர்பாளர் பிரேம் குமார், திருப்பத்தூர் பெரியசாமி அரியலூர் மாவட்ட தலைவர் ஆண்டவர்,
சுப்பையா,
மாநில மகளிர் அணி தலைவி நாகம்மாள்,
அரியாவூர் முத்துக்கண்ணு,ராமசாமி,பெரியசாமி,சங்க நிர்வாகிகள் மற்றும் ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.