திருச்சி பொன்மலைப்பட்டி அருகில் உள்ள திரு இருதய மேல்நிலைப் பள்ளியில் காமராஜரின் 121 வது பிறந்த நாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் அருட்பணி முனைவர் பிரான்சிஸ் சேவியர் விழாவிற்கு தலைமையேற்று பள்ளியில் நடைபெற்ற மாணவர்கள் இடையான பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். மேலும் காமராஜரை பற்றி அரிய கருத்துக்களை மாணவர்களிடம் தெளிவாக, விளக்கமாக பேசினார். இவ்விழாவில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ஸ்டீபன் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ராபர்ட் ஸ்டீபன் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்வை ஆசிரியர் ஆண்டனி அலெக்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இறுதியாக உதவி தலையாசிரியர் ஸ்டிபன் நன்றி கூறினார்.